படம் - மாறா(2021)
MAARA SONG LYRICS
பாடல் - யார் அழைப்பது யார் அழைப்பது
பாடல் வரிகள்
யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது
போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது
உடலின் நரம்புகள்
ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ
உயிரை பரவசமாக்கி
இசைக்குமா ஆரிரோ ராரோ
மழை விடாது வர அடாதி
தொட தேகம் நனையும்
மனம் உலாவி வர அலாதி
இடம் தேடும் ஓஹோ
யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது
சேரும் வரை போகும் இடம் தெரியாதனில்
போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா
பாதி வரை கேக்கும் கதை முடியாதனில்
மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்
கலைவார் அவரெல்லாம் தொலைவார்
வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்
அவர் அடையும் புதையல் பெரிது
அடங்காத நாடோடி காற்றல்லவா
யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது
போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது
பயணம் நிகழ்கிற பாதை முழுதும்
மேடையாய் மாறும்
எவரும் அறிமுகம் இல்லை எனினும்
நாடகம் ஓடும்
விடை இல்லாத பல வினாவும்
எழ தேடல் தொடங்கும்
விலை இல்லாத ஒரு வினோத
சுகம் தோன்றும் ஓ
யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது
0 Comments